உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி பால்குட அபிஷேக விழா!

ஆடி பால்குட அபிஷேக விழா!

புழல் : ஆடி திருவிழாவை முன்னிட்டு, பால் குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். புழல், திருப்பூர் குமரன் தெரு எல்லம்மன் கோவிலில், ஆடி திருவிழாவை முன்னிட்டு 4ம் ஆண்டு பால் அபிஷேக விழா நேற்று நடந்தது. 400 பெண்கள் பால்குடம் ஏந்தி, ஊர்வலம் வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.புழல் காந்தி பிரதான சாலையில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில், 29ம் ஆண்டு ஆடி திருவிழா நேற்று நடந்தது. காலையில், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, துர்க்கையம்மன் உற்சவர் திருவீதி உலா நிகழ்ச்சி நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !