மாரியம்மன் தேர் திருவிழா
ADDED :4093 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி மதுரா குடி காட்டில் மாரியம்மன் திருத் தேர் திருவிழா நடந்தது.நிறைமதி மதுரா குடிகாட்டில் மாரியம்மன் ஆதி தேர்த் திருவிழா உற்சவம் கடந்த 1ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை வீதியுலா உற்சவம் நடந்தது. ஆரியமாலா, காத்தவராயன் சுவாமி திருக் கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அங்கப்பிரதட்சணம், அலகு போடுதல், காளி கோட்டை இடித்த பின் பக்தர்கள் தீ மிதித்தனர். மாலை 4.30 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தேரில் எழுந்தருள செய்தனர். சிறப்பு பூஜைகளுக்குப்பின் தேரோடும் வீதி வழியாக பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். இன்று காலை 10 மணிக்கு மாரியம்மன் மஞ்சள் நீராடுதல் உற்சவமும், பகல் 2 மணிக்கு தாலாட்டு வைபவமும் நடக்கிறது.