உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி கருப்பனார் கோவில் திருவிழா!

கள்ளக்குறிச்சி கருப்பனார் கோவில் திருவிழா!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் கருப்பனார் கோவில் திருவிழா நேற்று நடந்தது. காலை வேத மந்திரங்கள் வாசித்து  வெண்ணியம்மன் கோவில் உற்சவர் சிலையை அலங்காரம் செய்து ஊர் எல்லையில் உள்ள கருப்பனார் கோவிலுக்கு பரம்பரை பூஜை கூடைகளுடன்  சென்றனர். பிற்பகல் ஒரு மணிக்கு உற்சவர், மூலவர் கருப்பனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பெண்கள் ஊரணி  பொங்கல் வைத்தனர்.  இரவு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !