உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசண்ட அம்மனுக்கு வளையல் அலங்காரம்!

பிரசண்ட அம்மனுக்கு வளையல் அலங்காரம்!

விழுப்புரம்: ஆடி பவுர்ணமியையொட்டி விழுப்புரம் நாப்பாளைய வீதியில் அமைந்துள்ள சண்ட பிரசண்ட மாரியம்மன் வளையல் காப்பு  அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆடி பவுர்ணமியையொட்டி விழுப்புரம் நாப்பாளைய வீதியில் அமைந்துள்ள  சண்ட பிரசண்ட மாரியம்மனுக்கு   10ம் தேதி காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் மாலை 5:00 மணிக்கு அம்மன் மலர்களால் ஜோடிக்கப்பட்டு  வளையல் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 7:00 மணிக்கு பக்தர்களுக்கு பி ரசாதம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !