உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாலை கோவிலில் பால்குட ஊர்வலம்!

சிறுவாலை கோவிலில் பால்குட ஊர்வலம்!

கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர்  கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. சூரப்பட்டு ஊராட்சியை அடுத்த சி றுவாலை கிராமத்தில் உள்ள பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர்  ஆலயத்தில் பால்குட ஊர்வலம் நடந்தது. மூலவர் பாலேஸ்வரருக்கும்  அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.  பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் அஷ்டலிங்க தரிசனம் நடந்தது. பெங்களூரு  மற்றும் புதுச்சேரியிருந்தும் சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், பொருளாளர்  பத்மநாபன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !