உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர் பீடத்தில் மகா குரு பூஜை

சித்தர் பீடத்தில் மகா குரு பூஜை

புதுச்சேரி: சக்திவேல் பரமானந்தர் சுவாமி கோவில் சித்தர் பீடத்தில் மகா குரு பூஜை நடந்தது. உழந்தை கீரப்பாளையத்தில் சக்திவேல் பாரமானந்தர் சுவாமி கோவில் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இந்த பீடத்தில் சக்திவேல் பரமானந்தர் சுவாமி மகாகுரு பூஜை நடந்தது. விழாவையொட்டி, மகா அபிஷேகம், குரு தீப ஆராதனை நடந்தது. காலை 7.00 மணிக்கு விசேஷ மகா யாகசாலை பூஜை, 10.15 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை பீடத்தின் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !