காரமடையில் ராகவேந்திரர் சிலை பிரதிஷ்டை
ADDED :4176 days ago
மேட்டுப்பாளையம் : காரமடையில் ராகவேந்திரர் சுவாமி சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. காரமடை, கோவை மெயின் ரோட்டில், பழைய மின் இலாகா வீதியில், ஸ்ரீஜெய மாருதி ராகவேந்திரர் அறக்கட்டளை சார்பில், ராகவேந்திரர் கோவில் அமைக்கப்படுகிறது. மரகத பச்சை கல்லில் ராகவேந்திரர் சுவாமி சிலை, பிருந்தாவனம், பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, லட்சுமி ஹயக்கிரிவர், கற்பக விநாயகர் ஆகிய சுவாமி சிலைகள், நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. முன்னதாக இந்த சுவாமி சிலைகளை, காரமடை நகரில் தேர் செல்லும் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.