உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சுமங்கலி பூஜை!

மகாமாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சுமங்கலி பூஜை!

சிவகங்கை:சிவகங்கை, ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில், ஆடிவெள்ளியை முன்னிட்டு சுமங்கலி மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு முப்பெரும் விழா நடந்தது. எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ், அதிதி கோட்னீஸ் ஆகியோர் பங்கேற்றனர். முப்பெரும் விழா, கடந்த 13ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. வாஸ்து சாந்தி, சண்டிஹோமம், பூர்ணாகுதி நடந்தது. நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு, காலையில் பெண்களுக்கு மஞ்சள் கயிறு உள்ளிட்ட சுமங்கலிக்கான பொருட்களை வழங்கி, பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. கோயில் அர்ச்சகர் சந்திரசேகரன் சுவாமிகள் தலைமையில், சிறப்பு யாகம், அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !