பழநி மஞ்சநாயக்கன்பட்டி ஆடித் திருவிழா!
ADDED :4130 days ago
பழநி: மஞ்சநாயக்கன்பட்டி உச்சிமாகாளியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில், பக்தர்கள் 1008 பால்குடங்கள் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பழநி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிமாத கடைசி வெள்ளி பால்குட அபிஷேக நிகழ்ச்சி நேற்று நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேணுகோபாலசுவாமி கோயிலில் இருந்து பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் மூலஸ்தான கோயிலில், அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் அர்ச்சனை, தீபாரதனை செய்யப்பட்டது.