உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனுவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

சீனுவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

தியாகதுருகம்: தியாகதுருகம் சீனுவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தியாகதுருகம்  அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனுவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.  மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்து ஆராதனைகள் நடந்தன. கண்ணன் பாடல்களை பக்தர்கள் பாடினர்.  மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. யாதவா சமூகத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !