சூளாங்குறிச்சி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா!
ADDED :4124 days ago
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி விழா நேற்று முன்தினம் நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த சூளா ங்குறிச்சி வரதராஜபெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. காலையில் பெருமாள் தாயாருக்கு சிறப்பு அபி ஷேகம் செய்த பின் சர்வ அலங்காரம் பெருமாளுக்கு நடந்தது. பெருமாளுக்குரிய அர்ச்சனை செய்தனர். சாற்று முறை, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கிருஷ்ண பக்தர்கள் உறியடித்தனர். வழுக்கு மரமும் ஏறப்பட்டது. இரவு நடந்த வீதியுலா உற்சவத்தில் பள்ளி மாணவர்கள் கிருஷ்ணர் ÷ வடமிட்டு சென்றனர்.