உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் உறியடி திருவிழா!

செஞ்சியில் உறியடி திருவிழா!

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. இதைö யாட்டி கடந்த 15ம் தேதி கருட கொடியேற்றினர். 16ம் தேதி பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண ருக்கு அபிஷேக ஆராதனையும், ஊரணி பொங்கல்  மற்றும் சாமி வீதியுலா நடந்தது. 17ம் தேதி மாலை 7 மணிக்கு உறியடி திருவிழா, வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு  ஊஞ்சல் சேவையும், பஜனை கோஷ்டிகளுடன் சாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை யாதவர் சமூக இளைஞர்களும், பொது மக்களும் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !