உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் சிறப்பு ேஹாம வழிபாடு!

அங்காளம்மன் கோவிலில் சிறப்பு ேஹாம வழிபாடு!

மடத்துக்குளம் அருகே கொழுமம் அங்காளம்மன் கோவிலில் கணபதி ஹோமம், சுதர்சன ேஹாமம், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிேஷகம் நடத்தப்படுவது வழக்கம். மடத்துக்குளம் அருகே உள்ள கொழுமம் அங்காளம்மன் கோவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் கடந்த மாதம் 7 ம்தேதி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஒரு பகுதியாக நேற்று காலை 8.30 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து சுதர்சன ஹோமம், சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் நடந்தன. இதில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !