உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தாயிஅம்மன் கோயில் திருவிளக்கு வழிபாடு!

சாத்தாயிஅம்மன் கோயில் திருவிளக்கு வழிபாடு!

பரமக்குடி : பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் 22 ம் ஆண்டு ஆவணித் திருவிழாவில், அம்மன் தினமும் மீனாட்சி, காமாட்சி உள்ளிட்ட அலங்காரங்களில் அருள்பாலித்தார். பஜனை, சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. ஆக., 17 ல் காலை 7 :00மணிக்கு பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் சிறப்பு அபிஷேகமும், மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு, அன்னபூரணி அலங்காரமும், திருவிளக்கு பூஜையும் நடத்தப்பட்டன. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இரவு வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !