உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜ பெருமாளுக்கு பவித்ர உற்சவம்

சுந்தரராஜ பெருமாளுக்கு பவித்ர உற்சவம்

ஆர்.கே.பேட்டை : சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு, வரும் 24ம் தேதி, ஆவணி பவித்ர உற்சவம் நடக்கிறது. ஆர்.கே.பேட்டை பிராமணர் வீதியில், சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், 1987ல் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.திருமலை திருப்பதியில் உள்ளது போன்று, ஆனந்த விமான நிலைய கோபுரம் அமைய பெற்றது, இந்த கோவில். ஆண்டுதோறும், சித்திரை பிரம்மோற்சவம், ஆவணி பவித்ர உற்சவம், மார்கழி உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் நடந்து வருகின்றன.வரும் 24ம் தேதி, பவித்ர உற்சவம் மூன்று நாள் திருவிழாவாக நடைபெற உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மாலை, 6:00 மணிக்கு, சால சுத்தி வாஸ்து, அங்குரார்ப்பணம் உள்ளிட்டவை நடைபெறும். சனிக்கிழமை காலை, 7:00 மணிக்கு, ஸ்தாபன திருமஞ்சனம், 9:00 மணிக்கு, பவித்ர புறப்பாடு, மகா நிவேதனம் உள்ளிட்டவையும், மாலையில் புறப்பாடும் நடைபெறும்.24ம் தேதி காலை, திருமஞ்சனம், உக்த ஹோமம், மாலை பத்ம பிரதஷணம், பிரம்ம கோஷம் அனுக்கிரகம், அதை தொடர்ந்து, 9:00 மணிக்கு, ஏகாந்த சேவையுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !