அனுமந்தையில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :4124 days ago
மரக்காணம் : அனுமந்தையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மரக்காணம் அடுத்த அனுமந்தை ஆதி நாராயணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு காலையில் விநாயகர், ஆதி நாரயணன், கருடாழ்வார், ராமானுஜர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு கிருஷ்ணர் ஊஞ்சல் நிகழ்ச்சி, பஜனை நடந்தது . 18ம் தேதி இரவு உரியடி திரு விழா நடந்தது. காளியாங்குப்பம், செட்டிக் குப்பம், கீழ்பேட்டை, பனிச்ச மேடு, கூனிமேடு, ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.