செஞ்சியில் 120 இடங்களில் விநாயகர் சிலைகள்
ADDED :4124 days ago
செஞ்சி : செஞ்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 120 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடந்த இந்து முன்னணியினர் முடிவு செய்துள்ளனர். செஞ்சி தாலுகாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியன்று கிராமங்களிலும், நகரிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு 120 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணி தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அடுத்த மாதம் 2ம் தேதி நடக்க உள்ள விநாயகர் ஊர்வலத்தில் வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் பேசுகிறார்.