மேல் ஒலக்கூர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :4124 days ago
செஞ்சி : செஞ்சி தாலுகா மேல்ஒலக்கூர் சக்தி விநாயகர் கோவில் திருப்பணிகள் செய்து ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை (20ம் தேதி) நடக்க உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு அனுக்ஞை, குரு வந்தனம், விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹூதி நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, சூர்ய பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, காலை 9.45 மணிக்கு சக்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.