உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்!

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்!

ஆர்.எஸ்.மங்கலம் : ராம பிரானால் தரிசிக்கப்பட்ட கோயிலாகவும், தென் மாவட்டத்தில் சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருமணம் நடைபெறும் ஒரே இடமாகவும் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் திகழ்கிறது. இங்கு, ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் சதுர்த்தி விழா, நேற்று மாலை அனுக்கை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நாளை (ஆக.,21)முதல் தினமும் கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெறும். 8 ம் நாளில் சித்தி,புத்தி ஆகிய இரு தேவியருடன் திருக்கல்யாணமும், அதைத்தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறும். கடைசி நாளான 10வது நாளில் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !