2 நாட்களில் 185 இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக., 30 மற்றும் 31 ஆகிய 2 நாட்களில், 185 இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. இந்து முன்னணி மாநில பேச்சாளர் ரத்தின சபாபதி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் கூறியதாவது: சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் 33, பரமக்குடியில் 27, ராமேஸ்வரத்தில் 15, பாம்பனில் 12 , மண்டபத்தில் 12, தங்கச்சிமடத்தில் 5, உச்சிப்புளியில் 20, தேவிபட்டினத்தில் 12, திருப்புல்லாணியில் 10, நயினார்கோவிலில் 7, ஆர்.எஸ்.மங்கலத்தில் 10, திருவாடானையில் 15, ராமசாமிபட்டியில் 2, கடலாடியில் 3, காவாகுளத்தில் 1, கீழமுந்தலில் 1 என 185 இடங்களில் விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பில் ஆக., 29ல் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதில், 152 சிலைகள் ஆக.,30 ல் கடல், குளம், கண்மாய்களில் கரைக்கப்படும். ராமநாதபுரத்தில் 33 சிலைகள் ஆக., 31ல் கரைக்கப்படும். மாநில செயலாளர் சுடலைமணி, ராமநாதபுரம் நகர் செயலாளர் கோட்டைச்சாமி, மண்டபம் நகர் செயலாளர் சங்கு முருகன் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஊர்வலத்தில் வாடிப்பட்டி மேளம் அடித்துச் செல்ல போலீசார் அனுமதிக்க வேண்டும், என்றனர்.