பாகம்பிரியாள் கோயிலில் ரூ. 21 லட்சம் காணிக்கை!
ADDED :4068 days ago
திருவாடானை : திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் உள்ள 4 உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. இதில், ரூ. 13 லட்சத்து 70 ஆயிரத்து 211 ரூபாய் ரொக்கம், 288 கிராம் தங்கம், 838 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதன் மூலம் கோயிலுக்கு ரூ. 21 லட்சம் வருமானம் கிடைத்தது. இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ரோஷாலி சுமதா, சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சரக கண்காணிப்பாளர் சரவண கணேஷ், கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் உடன் இருந்தனர்.