மீனாட்சி கோயிலில் நகரும் ’ஸ்கை லிப்ட்!
ADDED :4065 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேற்பகுதியை சுத்தம் செய்ய நகரும் ’ஸ்கை லிப்ட்’ ஏணிப்படி கருவி வழங்கப்பட்டது. கோயில் உள் பிரகாரங்களில் உள்ள சிற்பங்கள், மேற்கூரைகளை சுத்தம் செய்ய ’கோக்காலி’ பயன்படுத்தப்பட்டன. எனினும், அவை உயரமாக இல்லாததால் சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. அதை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லவும் ஊழியர்கள் சிரமப்பட்டனர்.இதையடுத்து கோபுரம், உள் பிரகாரம், மேற்கூரைகளை சுத்தம் செய்ய வசதியாக ரூ.5 லட்சம் மதிப்பில் நகரும் ’ஸ்கை லிப்ட்’ தக்கார் கருமுத்து கண்ணன் சார்பில் வழங்கப்பட்டது.