கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்!
ADDED :4065 days ago
அவலுõர்பேட்டை: மேல்மலையனுõர் ஒன்றியம் வளத்தியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி காலையில் ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிற்பகலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா, பாகவதர் குழுவினர்களின் பஜனையுடன் நடந்தது. மாலையில் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், கரகாட்டம், நையாண்டி மேளம், இசை நிகழ்ச்சிகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.