வேலூர் நாராயணி பீடம் 7ம் ஆண்டு விழா
வேலூர் :நாராயணி பீடம், ஏழாம் ஆண்டு விழா நாளை நடக்கிறது.வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் நாராயணி பீடம் துவங்கி, ஏழாம் ஆண்டு விழா நாளை நடக்கிறது. அன்று, லட்சுமி நாராயணி முன், அஷ்ட லட்சுமி மகா யாகம் நடத்தப்பட்டு, 150 கிலோ எடையிலான வெள்ளி கோமாதா சிலை சக்தி அம்மாவின் ஆசியுடன் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இதை முன்னிட்டு, கடந்த, 17ம் தேதி முதல் யாகங்கள் துவங்கப்பட்டு உள்ளது. 17ம் தேதி ஆதிலட்சுமி யாகம், 18ம் தேதி சந்தான லட்சுமி யாகம், 19ம் தேதி கஜலட்சுமி யாகம் நடந்தது. 20ம் தேதி தனலட்சுமி யாகம், 21ம் தேதி தானிய லட்சுமி யாகம் நடந்தது. நேற்று, விஜயலட்சுமி யாகம் நடந்தது. இன்று, வித்யா லட்சுமி யாகம் நடக்கிறது. இதுதவிர, 17ம் தேதி முதல் காலை, 8 மணியில் இருந்து, 8.30 மணிக்குள் கோ பூஜை, கஜ பூஜை மற்றும் அஷ்வ பூஜை நடந்து வருகிறது. 8.30 மணி முதல், 11.30 மணிக்குள்ளும், மாலை, 6 மணி முதல் இரவு, 8 மணி வரை மகா லட்சுமி மூல மந்திர ஹோமம் நடக்கிறது. இரவு, 8 மணி முதல், 8.30 மணி வரை மகா ஆராத்தி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை சக்தி அம்மா செய்து வருகின்றார்.