உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயிலில் மதிய தரிசனம்: ஆலய பாதுகாப்புக்குழு கோரிக்கை!

மதுரை மீனாட்சி கோயிலில் மதிய தரிசனம்: ஆலய பாதுகாப்புக்குழு கோரிக்கை!

மதுரை :மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் நலன் கருதி மதிய இடை வெளியிலும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும், என இந்து ஆலயப் பாதுகாப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.இதன் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச் செயலாளர் சுந்தரவடிவேல் தலைமையில் நடந்தது. மீனாட்சி கோயிலில் பகல் 12.30 முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இவ்வேளையில் வெளியூர் பக்தர்கள் சித்திரை வீதிகளில் வெயிலில் வாடுகின்றனர்.மதிய இடைவெளியில் கோயிலுக்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம், 16 கால் மண்டபம், கோபுரங்களையும் காணும் வசதியை கோயில் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். சித்திரை வீதிகளில் காலையில் ’வாக்கிங்’ செல்வோர் இடமிருந்து வலமாக செல்வதை தடுக்க வேண்டும், என தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !