உடுமலை மாரியம்மன் கோவிலில் கஞ்சிக்கலய ஊர்வலம்!
ADDED :4063 days ago
உடுமலை: உடுமலை, சர்தார் வீதியில் உள்ள மேல்மருவத்துõர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூர கஞ்சிக்கலய பெருவிழா ஆக., 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரு நாட்களாக சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான கஞ்சி க்கலய ஊர்வலம், உடுமலை மாரியம்மன் கோவிலில் புறப்பட்டது; மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். தளி ரோடு, நேரு வீதி, சர்தார் வீதி வழியாக ஊர்வலம் கோவிலை அடைந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.