புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா துவங்கியது!
ADDED :4112 days ago
பாகூர் : பாகூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய 148ம் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு, நேற்று காலை 8.00 மணிக்கு, முதன்மை குரு அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.தொடர்ந்து, 10.00 மணிக்கு பங்குத்தந்தை யேசு நசரேன் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் தினமும் மாலை 6.00 மணிக்கு சிறிய தேர் பவனியும், திருப்பலியும் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 30ம் தேதி மாலை 6.00 மணிக்கு, ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜார்ஜ், பால்ராஜ், ஜெயராஜ் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.