சின்ன முதலாளி!
ADDED :4454 days ago
ஊரிலே பெரிய மனிதர்கள் என்று நாலுபேர் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் மேலாக மாநிலம், நாடு என்று அவரவர் தகுதிக்கேற்ப பெரியமனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் விட அகில உலகத்திற்கும் மேலானவராக உச்சஸ்தானத்தில் இருப்பவர்கள்பரமேஸ்வரராகிய சிவபெருமானும், ராஜராஜேஸ்வரியாக இருக்கும் அம்பிகையும் தான். அவர்களின் மூத்தபிள்ளையே விநாயகர். அதாவது உண்மையிலேயே பெரிய இடத்துப் பிள்ளை என்றும், சின்னமுதலாளி என்றும் சொல்வதற்உரியவர் விநாயகர் தான். இவரை வழிபட்டாலே அவருடையபெற்றோராகியசிவபார்வதியும்மனம் குளிர்ந்து அருள் செய்து விடுவார்கள்.