லட்சுமி ஹயக்கிரீவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா 29ல் துவக்கம்!
ADDED :4253 days ago
புதுச்சேரி : முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள பிரசித்தி பெற்ற, லட்சுமி ஹயக்கிரீவர் கோவிலில், 43வது பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் (29ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு சிறப்பு பூஜைகள் செய்து, சுவாமி சந்திரபிரபையில் வீதி உலா நடக்கிறது. பிரம்மோற்சவ விழா நாட்களில், சிறப்பு திருமஞ்சனம், ஹோமம் நடக்கிறது. 30ம் தேதி சூரியபிரபை, 31ம் தேதி சேஷ வாகனத்தில் வீதியுலா, 1ம் தேதி கருடசேவை நடக்கிறது.2ம் தேதி அனுமந்த சேவை, 3ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 5ம் தேதி வெண்ணைத்தாழி உற்சவம், 6ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் லட்சுமிஹயக்கிரீவர் பெருமாள் பக்தஜன சபாவினர் செய்து வருகின்றனர்.