நடராஜர் கோவிலில் பின்னணி பாடகி ஜானகி தரிசனம்!
ADDED :4068 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் திரைப் பட பின்னணி பாடகி ஜானகி சுவாமி தரிசனம் செய்தார். திரைப்பட பின்னணி பாடகி ஜானகி கும்பகோணம் சென்று திரும்பி வரும் போது, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். தீட்சிதர்கள் வரவேற்பு அளித்தனர். சுவாமி தரிசனம் முடித்து கோவிலிலிருந்து வெளியே வரும்போது, ஏராளமான பக்தர்கள் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.