கள்ளக்குறிச்சி தேவி கருமாரியம்மன் கோவில் தேர் திருவிழா!
கள்ளக்குறிச்சி: ரோடுமாமந்தூர் தேவி கருமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்தூர் தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினம் இரவு அம்மனுக்கு வீதியுலா நடந்தது. அய்யனார், ராயமுனியப்பன் சுவாமிக்கு ஊரணி பொங்கல் வைத்தனர். நேற்று முன்தினம் பால் குடம் எடுத்தல், அம்மனுக்கு ஊரணி பொங்கல், காத்தவராயன் கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு அம்மனுக்கு அங்கப்பிரதஷ்னம், கோட்டை இடித்தல் நடந்தது. தேவி கருமாரியம்மனுக்கு அலங்காரம் செய்து தேரில் எழுந்தருள செய்தனர். தேர் திருவிழாவில் அழகு வேலுபாபு எம். எல்.ஏ., ஒன்றிய சேர்மன் ராஜசேகர், தாசில்தார் முனுசாமி, சிறுவங்கூர் ஊராட்சி தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.