உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 43 அடி சிவ துர்கை அம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்!

43 அடி சிவ துர்கை அம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காரைக்கால்: திருநள்ளார் அத்திப்படுகை நாகாத்தம்மன்,மாசாணி அம்மன் கோவிலில் 43 அடிஉயரமுடைய சிவ துர்கை அம்மனுக்கு கும்பாபிஷேகம்   நடந்தது. காரைக்கால் திருநள்ளார் அத்திப்படுகை நாகாத்தம்மன்,மாசாணி அம்மன் கோவிலில் நேற்று புதிதாக எழுப்பட்டுள்ள 43 அடி உயரமுடைய   விஸ்வருபிணி சும்ஹார மஹா சிவ துர்கை அம்மனுக்கு கும்பாபிஷேக நடந்தது. இக்கோவில் அத்திப்படுகை சர்வதோஷ பரிகார ஸ்தலம் கொண்ட   நாகத்தம்மன், மாசணி அம்மன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பில்லி,சூனியம்,ஏவல்கள், திருமணதடை, கிரககேளாறுகம் இவை அனைத்தும்   அம்மனின் அருள் பெற்றால் நிவர்த்தியாகும்.இதனால் தினம் பக்தர்கள் அம்மனை வழிப்படுகின்றனர்.சிவ துர்கை அம்மனுக்கு கும்பாபிஷேகத்தில்   பல்வேறு பகுதியிலிந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !