விநாயகர் சிலை விஜர்சனம்: சிறுவர்கள் கொண்டாட்டம்!
ADDED :4408 days ago
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் விநாயகர் சிலை விஜர்சனத்தின் போது சிறுவர்கள் விநாயகரின் சிலை பாகங்களை தேடுவதில் மும்முரமாக இருந்தனர். விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டையில் விநாயகர் சிலை விஜர்சனம் நேற்று நடந்தது. அப்போது சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஏரியில் இறங்கி விநாயகரின் தலை, தும்பிக்கையை எடுத்து தலையில் மாட்டி கொண்டு வெளியே வந்தனர். இதற்காகவே சிறுவர்கள் ஏரி தண்ணீரில் விநாயகரின் சிலை பாகங்களை தேடி எடுத்தனர்.