கொள்ளாபுரியம்மன் கோவில் தீமிதி திருவிழா!
ADDED :4056 days ago
ஆர்.கே.பேட்டை: வீராணத்துார் காலனியில் கொள்ளாபுரியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வீராணத்துார் காலனியில் உள்ள கொள்ளாபுரியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தொடர்ந்து நான்கு நாட்கள் அம்மன் உற்சவமும், பாரத பிரசங்கமும் நடந்தது. நேற்று முன்தினம், காலை 10:00 மணியளவில், துரியோதனன் படுகளம் நடந்தது. மாலை 6:00 மணியளவில், திரளான பக்தர்கள் காப்பு, கட்டி தீமிதித்தனர். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை தர்மர் பட்டாபிஷேகத்துடன், விழா நிறைவு பெற்றது.