உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாநுஜரின் உஞ்சவிருத்தி ரத யாத்திரை!

ராமாநுஜரின் உஞ்சவிருத்தி ரத யாத்திரை!

புதுச்சேரி: ராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு 2017ல் வருவதை முன்னிட்டு, கீழ்சாத்தமங்கலத்தில் உஞ்சவிருத்தி ரதயாத்திரை நடந்தது. ஸ்ரீமத்  ராமாநுஜரின் கொள்கைகளான உலக அமைதி, மனிதநேயம், மழை வளம் மற்றும்  இயற்கை வளம் பேணிக்காத்தல் ஆகியன வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ராமாநுஜரின் திருவுருவப்படம், பெருமாள் பிராட்டியின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு  வீதியுலா நடந்தது. அப்போது, ராமாநுஜரின் திருவுருவப்படம், மங்கள அரிசி, குங்குமம், துளசி, கற்கண்டு வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் மடுகரை,  குரு நகர், ராம்பாக்கம், டி.என்.பாளையம், செல்லஞ்சேரி, வில்லியனுார், முத்தியால்பேட்டை, மஞ்சினி நகர், புதுக்கடை, அரியாங்குப்பம்  உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பஜனை குழுவினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகளின் புதுச்சேரி சிஷ்யர்கள்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !