உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயங்களில் சனி பிரதோஷ விழா!

சிவாலயங்களில் சனி பிரதோஷ விழா!

ஊத்துக்கோட்டை: சிவாலயங்களில் வரும், 6ம் தேதி சனிப்பிரதோஷ விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி  கிராமத்தில் உள்ள, சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலி க்கிறார். இங்கு ஒவ்வொரு மாதமும், திரயோதிசி திதி நாளில் வரும், பிரதோஷ விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். இதில், சனிக்கிழமை வ ரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமான் நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. இது ஆண்டின் சில நாட்கள் மட்டும் வரும். இந்தாண்டு கடந்த,  ஏப்ரல் மாதம் இரண்டு சனிப்பிரதோஷ விழா முடிந்தது. வரும், 6ம் தேதி இந்தாண்டின் கடைசி சனிப்பிரதோஷ விழா நடைபெற உள்ளது. இதன்  காரணமாக பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !