நரசிங்கராயன்பேட்டையில் 4ம் தேதி கும்பாபிஷேகம்!
ADDED :4055 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா நரசிங்கராயன் பேட்டை செல்வ விநாயகர், எட்டியம்மன் நகர் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில் மகா கும்õபிஷேகம் 4ம் தேதி நடக்க உள்ளது. நாளை (3ம்தேதி) காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்கின்றனர். பகல் 11 மணிக்கு சுவாமி கரிக்கோல ஊர்வலம் நடக்க உள்ளது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பி ரவேசம், முதல் கால யாகசாலை பூஜையும், இரவு 9 மணிக்கு சுவாமி பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்க உள்ளது. 4ம் தேதி காலை 6 மணிக்கு தத்துவார்ச்சனை, நாடி சந்தனம், விசேஷ ஷன்னதி ஹோமம், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும் 9 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை நரசிங்கராயன் பேட்டை கிராம மக்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.