லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கருட சேவை உற்சவம்!
ADDED :4056 days ago
புதுச்சேரி: லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரமோற்சவ விழாவில் கருட சேவை நடந்தது. முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 43வது பிரமோற்சவ விழா கடந்த 28 ம்தேதி துவஜாரோஹணத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்து வரும் விழாவில் நேற்றுமுன்தினம் கருட சேவை நடந் தது. நேற்று (2ம்தேதி) அனுமந்த சேவையும், இன்று திருக்கல்யாணம்–யானை வாகனம். 5ம் தேதி வெண்ணைத்தாழி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமிக்கு காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் விசேஷ திருமஞ்சனமும், ஹோமம், சேவை சாற்றுமுறை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் பக்த ஜன சபையார் மற்றும் கோவில் சிறப்பு அதிகாரி செய்து வருகின்றனர்.