உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்!

செஞ்சியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்!

செஞ்சி: செஞ்சியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செஞ்சி தாலுகாவில் இந்து  முன்னனி, மற்றும் பொதுமக்கள் சார்பில் நுõற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 3 முதல் 15 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய் தனர். பெரும்பகுதி சிலைகளை அந்தந்த பகுதி நீர் நிலைகளில் கரைத்தனர். மீதமிருந்த சிலைகளை இந்து முன்னணி சார்பில் மரக்காணம் கடலில்  கரைக்க நேற்று செஞ்சியில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். செஞ்சி சத்திர தெருவில் இருந்து ஊர்வலம் துவங்கியது. இந்து முன்னணி  மாவட்ட செயலாளர் சிவ சுப்பிரமணி தலைமை தாங்கினார்.  நிர்வாகிகள் ராமலிங்கம், கைலாஷ் வரவேற்றனர். கமலக்கன்னியம்மன் கோவில் அற ங்காவலர் அரங்க ஏழுமலை, என்.ஆர்.பேட்டை முன்னாள் தலைவர் ஏழுமலை ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். பா.ஜ.,  மாவட்ட தலைவர் ராஜேந்திரன், வி.எச்.பி., ராமசாமி, தெய்வீக மக்கள் இயக்கம் ராஜாதேசிங்கு மற்றும் இந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் கலந்து  கொண்டனர். விழுப்புரம் சாலை, திருவண்ணாமலை சாலை, தேசூர்பாட்டை, சிங்கவரம் சாலை, காந்தி பஜார் வழியாக ஊர்வலம் மாலை 4 மணிக்கு  செஞ்சி கூட்ரோட்டிற்கு வந்தது. அங்கு இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் சிறப்புரை  நிகழ்த்தினார். கூடுதல் பாதுகாப்பு எஸ்.பி., ம னோகரன் மேற்பார்வையில் செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் உட்பட 3 டி.எஸ்.பி.,கள் ஐந்து சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டபோ லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !