ராஜவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4166 days ago
புவனகிரி: புவனகிரி கோட்டைமேட்டுத்தெரு ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி கோட்டைமேட்டுத் தெரு ராஜ விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜை நடந்தது. முன்னதாக வேத விற்பன்னர்களைக் கொண்டு கோ பூஜை, நவ கண்ணியர் பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து யாக சாலை பூஜையும் அதனைத் தொடர்ந்து நேற்று காலை 9:45 மணிக்கு கோவில் கலசத்தில் வேத விற்பன்னர்களைக் கொண்டு புனிதநீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் புவனகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பநக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.