விநாயகர் சிலை ஊர்வலம் முஸ்லிம் பிரமுகர் துவக்கி வைப்பு!
குமராட்சி: குமராட்சி ஸ்ரீ பொய்யூராய் பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்ட பிள்ளையார் ஊர்வலத்தை முஸ்லிம் பிரமுகர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சியில் ஸ்ரீ பொய்யூராய் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கடந்த மாதம் 29ம் தேதி விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மதத்தைச் ÷ சர்ந்த அன்சாரி என்பவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். குமராட்சி ஒன்றிய சேர்மன் பாண்டியன் இனிப்பு வழங்கி ஊர்வலத்தை வழியனுப்பி வைத்தார். ஊர்வலத்தில் விழாக்குழுத் தலைவர் தமிழ்வாணன், கண்ணன், செழியன், பால் குமார், கலையரசன், ஐயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். ராஜன் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால், காய்ஞ்ச வாய்க்காலில் விநாயகர் சிலை கரைக்கப் பட்டது.