விநாயகர் சதுர்த்தி விழா இந்து ஒற்றுமை ஊர்வலம்!
ADDED :4051 days ago
விழுப்புரம்: விநாயகர் சதுõர்த்தியை முன்னிட்டு இந்து ஒற்றுமை ஊர்வலம் விழுப்புரத்தில் நடந்தது. இந்து மக்கள் கட்சி, இந்து ஐக்கிய பேரவை சார்பில் விநாயகர் சதுõர்த்தி விழா மற்றும் இந்து ஒற்றுமை ஊர்வலம் நேற்று விழுப்புரத்தில் நடந்தது. பழைய பஸ் நிலையத்தில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடலூர் கடற்கரைக்கு சென்றது. இந்து ஐக்கிய பேரவை தேசிய தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இளைஞரணி தலைவர் ரமேஷ், செயலாளர் அர்ஜூன், குரு மிஷன் தலைவர் ராமானுஜ குருஜி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் யோகா ராஜா சிறப்புரை யாற்றினார். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஜெயமூர்த்தி, மதுரை மாவட்ட தலைவர் சோலைக் கண்ணன், வழக்கறிஞர் பாண்டுரங்கன், நிர்வாகிகள் அண்ணாமலை, சீனுவாசன், மஞ்சினி, ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.