உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி தேவஸ்தான கிடங்கில் தீ!

திருப்பதி தேவஸ்தான கிடங்கில் தீ!

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கிடங்கு திருப்பதி, அலிபிரியில் உள்ளது. இங்கு ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்த, 204 அரிசி மூட்டைகள், பிளீச்சிங் பவுடர் மூட்டைகள், தானிய வகைகள் வைக்கப்படும். நேற்று காலை, 11:00 மணிக்கு இங்கு மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனம் வருவதற்குள், பெரும்பாலான அரிசி மூட்டைகள் தீயில் கருகின. அதன்பின், தீயணைப்பு வீரர்கள் போராடி, தீயை அணைத்தனர். இதில், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக, கிடங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !