விக்கிரவாண்டி ரெட்டிக்குப்பத்தில் கும்பாபிஷேகம்!
ADDED :4056 days ago
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி ஒன்றியம் ரெட்டிக்குப்பத்தில் நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த ரெட்டிக்குப்பம் கிராமத்தில் செல்வ விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், கங்கையம்மன், பாலமுருகன் , அய்யனாரப்பன் கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 1ம்தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை நான்காம் கால யாக சாலையில் பூர்ணாஹூதி முடிந்து, கடம் புறப்பாடாகி காலை 8.04 மணிக்கு செல்வ வினாயகர் கோவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. அய்யனாரப்பன்,கங்கையம்மன் கோவில்களில் புனித நீர் ஊற்றினர். காலை 10.04 மணிக்கு சென்னை அரிகரசர்மா குருக்கள் ரேணுகாம்பாள் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றினார். விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் கிரிஜா முரளிதரன் தலைமையில் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.