உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவம் துவக்கம்!

ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவம் துவக்கம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், நேற்று பவித்ர உற்சவம் கோலாகலமாக துவங்கியது. வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவித்ர உற்சவம், 9 நாட்கள் நடப்பது வழக்கம். நடப்பாண்டு, நேற்று காலை, 9.15 மணிக்கு நம்பெருமாள் உற்சவர், மூலஸ்தானத்தில் இருந்து யாகசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு திருவாராதனம், திருமஞ்சனம் ஆகியவை நடந்தது. இன்று, (6ம்தேதி) மதியம், 2 மணி முதல் மாலை, 6 மணி வரை மூலவர் பெருமாள் பூச்சாண்டி அவதாரத்தில் பக்தர்கர்கள் தரிசனம் செய்யலாம். உற்சவ காலங்களில் நாள்தோறும் மாலையில், நம்பெருமாள் பவித் ரோத்சவ மண்டப்பத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !