உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் கல்யாண வெங்கடரமண கோவில் கும்பாபிஷேக விழா!

கரூர் கல்யாண வெங்கடரமண கோவில் கும்பாபிஷேக விழா!

கரூர்: கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்தும் வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 10 க்கும் மேற்பட்ட பஸ்களில் கொடுமுடி சென்ற பக்தர்கள், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த எடுத்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரைகள் ஊர்வலத்துக்கு முன் செல்ல, பின்னால் தீர்த்த எடுத்த பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். கோவில் முகப்பில் உள்ள தூணில் புனித நீரை பக்தர்கள் ஊற்றினர். சுக்தஹோமம், சுதர்சனஹோமம், யாகசாலை பிரவேசம், தீபாராதனை நடந்தது. இன்று காலை 7.30 மணிக்கு புண்யாகவாசனம், திருவாராதனம், அக்நி ஆராதனம், காலை, 9
மணிக்கு மஹா சாந்தி ஹோமம், மதியம், 1 மணிக்கு சாற்று முறை, மாலை, 5.30 மணிக்கு விமானம் கண் திறப்பு, மாலை, 6 மணிக்கு கும்பம் புறப்பாடு, பெருமாள் திருமஞ்சனம், இரவு, 7 மணிக்கு ஸ்ர்வ தேவார்ச்சனம், இரவு, 10 மணிக்கு பூர்ணாகுதி, திருவாராதனம், தீபாராதனை நடக்கிறது. நாளை அதிகாலை, 4.30 மணிக்கு புண்யாகவாசனம், திருவாராதனம், அக்நி ஆராதனம், நித்ய ஹோமம், மஹா பூர்ணாகுதி ஹோமம், காலை, 7 மணிக்கு யாத்ராதானம், கும்பம் புறப்பாடு, காலை, 7.31 மணிக்கு விமானம், மூர்த்திகள் கும்பாபிஷேகம், காலை, 8.15 மணிக்கு தசதரிசனம், பிரம்மகோஷம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !