உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எட்டாமடையில் நாராயணகுரு ஜெயந்தி விழா!

எட்டாமடையில் நாராயணகுரு ஜெயந்தி விழா!

நாகர்கோவில்: எட்டாம ஸ்ரீ நாராயணகுரு 160-வது குருஜெயந்தி விழா மற்றும் குரு நினைவு மண்டபம் 10-வது ஆண்டு விழா இன்று தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது. இன்று காலை 8 மணிக்கு கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு விளையாட்டு போட்டிகளும், ஏழு மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. 7-ம் தேதி இரவு 7 மணிக்கு நித்ய பூஜை நடக்கிறது. 8-ம் தேதி காலை 7.30-க்கு பூஜை, 9 மணிக்கு கொம்புமேளம், 10 மணிக்கு சிங்காரி மேளம், 11 மணிக்கு குருபூஜை ஆகியவை நடக்கிறது. இதனை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். பகல் ஒரு மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு நாராயணகுரு சிலையுடன் ஊர்வலம் ஆகியவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !