திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்!
பழநி: முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.இக்கோயிலில் 1998ல் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 2012ல் ரூ.90 லட்சத்தில் மீண்டும் திருப்பணிகள் துவங்கின. ஆக., 22ல் முகூர்த்தக்கால் நடப்பட்டு கோயில் மயில் மண்டபம், உட்பிரகாரங்களில் யாகசாலைகள் அமைக்கப்பட்டன; செப்.,1ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. செப்., 4ல் முதற்கால யாகசாலை பூஜை, நேற்று அதிகாலை ஆறாம்கால பூஜை நடந்தது.காலை 6 மணிக்கு யாகசாலை கும்பங்கள் புறப்பாடாகின.
காலை 6:30 மணிக்கு திருஆவினன்குடி ராஜகோபுரம், உட்பிரகார விமானங்கள், சன்னதிவீதி வேளீஸ்வரர் கோயில் விமான கலசங்களுக்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது; ’ஸ்பிரே’ மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.காலை 6:40 மணிக்கு மூலஸ்தான குழந்தை வேலாயுதசுவாமி, வேளீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பிற்பகல் 12 மணிக்கு உச்சிகாலபூஜையில், மூலவர் குழந்தை வேலாயுதசுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது; இரவு 7 மணிக்கு, திருவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.