உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முளகுமூடு மரியன்னை ஆலய திருவிழா!

முளகுமூடு மரியன்னை ஆலய திருவிழா!

நாகர்கோவில்: முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் சாலமோன் தலைமையில் கொடியேற்று நடைபெற்றது. தொடர்ந்து 14-ம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலையில் ஜெபமாலை, திருப்பலி, காணிக்கை பவனி ஆகியவை நடக்கிறது. 13-ம் தேதி மாலையில் மரியன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது. 14-ம் தேதி காலையில் குடும்ப விழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இதில் ஜூபிலி தம்பதியருக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு ஆகியவை நடக்கிறது. 11 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !