வேளாங்கண்ணி ஆலய விழா துவக்கம்!
ADDED :4055 days ago
விருதுநகர்:விருதுநகர் ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய விழாவை
முன்னிட்டு, மாதா திருவுருவம் பொறித்த கொடியை, மதுரை மறை மாவட்ட மறைப்பணி இயக்குனர் ஆர். ஜான் பிரிட்டோ பாக்கியராஜ், ஆர்.ஆர்.நகர் பாதிரியார் ஜான் மார்ட்டின் ஆகியோர் ஏற்றினர். இதை தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடந்தது. விழாவையொட்டி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்., 8 ல் தேர்ப்பவனி நடை பெற உள்ளது. இதில், மதுரை பழங்காநத்தம் பாதிரியார் சிலுவை மிக்கேல் ராஜ், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி துணை முதல்வர் சேசு சபை ரூபஸ் கலந்து கொள்கின்றனர்.